திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகத்திலேயே முதல்முறையாக, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் துளசி பார்மசியுடன் இணைந்து, இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களின் முதல் வாரத்திலும் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது 20-ஆவது மாத BP மற்றும் SUGAR பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. மேலும், தற்போது சீசன் ஜலதோஷம் அனைவருக்கும் வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முகாமில் கூடுதலாக நுரையீரல் பரிசோதனையும் (LUNGS TEST) செய்யப்பட உள்ளது.

இம்முகாம் வரும் 06/07/2026 திங்கள் கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும். இம்முகாமில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision

Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments