காப்பகங்களில் ஆடிப்பாடி கொண்டாடிய முதியவர்கள்.நெருப்பில்லா சமையலிலும் அசத்தல். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ – மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments