நெகிழி இல்லா உலகம்… இயற்கையின் வசந்தம்! — தோகைமலையில் 1000 மாணவச் செல்வங்கள் முன்னிலையில் மேஜிக் மூலம் விழிப்புணர்வு விதைத்த ‘மேஜிக் மகா’!
தோகைமலை,சிறுவயதில் தொடங்கும் நற்பழக்கமே சமுதாய மாற்றத்தின் தொடக்கப்புள்ளி!” – பூமிப்பந்தைப் பாழ்படுத்தும் பிளாஸ்டிக் அரக்கனை வேரறுத்து, பசுமையான நாளைய உலகை இளைய தலைமுறையின் கைகளில் ஒப்படைக்கும் உன்னத நோக்கோடு, தோகைமலை ரோட்டரி சங்கம் முன்னெடுத்த மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி செர்வைட் கல்லூரி வளாகத்தில் நேற்று (24.08.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

செர்வைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் திரண்டிருந்த இந்த எழுச்சி மேடையில், உலக சாதனையாளர் “மேஜிக் மகா” அவர்கள் “No Plastic, Just Magic” என்ற தலைப்பில் கண்கவர் மாயாஜாலங்கள் வழியாகப் பிளாஸ்டிக் தவிர்ப்பின் அவசியத்தை காட்சிப்படுத்தினார். வெறும் வார்த்தைகளால் சொல்லாமல், கைவண்ண மாயாஜாலங்கள் வழியாகச் சிறுவயதிலேயே நெகிழியைத் தவிர்க்க வேண்டிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிய வைத்துப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில் முன்னதாக நடத்தப்பட்ட “நெகிழி ஒழிப்பு புராஜக்ட்” போட்டியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நெகிழிக்கு மாற்றான சூழல் நட்புப் புதுமைகளையும் மாற்று வழிகளையும் காட்சிப்படுத்திய 8 சிறந்த மாணவ, மாணவியர்களுக்குப்பரிசுகளும்விருதுகளம் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக Rev.Sis. தேவ சகாய ராணி (செயலாளர், MSSM, தோகைமலை), Rev.Sis. ஆரோக்கிய தெரஸ் (முதல்வர், செர்வைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோகைமலை), Rtn. சுகந்தி ரத்தினம் (மண்டல ஒருங்கிணைப்பாளர், RID-3000), Rtn. R.P. மணிகண்டன் (உதவி ஆளுநர், RID-3000), Rtn. P. குணசேகரன் (துணை முதல்வர், செர்வைட் கல்வியியல் கல்லூரி, தோகைமலை), தோகைமலை ரோட்டரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் தோகைமலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகக் கலந்துகொண்ட 1000-க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்பட்டது.
“இளமையிலேயே இயற்கையைக் காக்க உறுதியேற்போம்; பசுமையான நாளைய பாரதத்தைப் படைப்போம்!” என்ற உன்னத முழக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி மகத்தான வெற்றி பெற உறுதுணையாக நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தோகைமலை ரோட்டரி சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments