Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தனது தலைவருக்கு ஓட்டு கேட்க தயங்கும் தவெகவினர் – பொதுச் செயலாளர் என்ன செய்கிறார்?பொறுப்பாளர்கள் யார்?

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் இனிகோ, அதிமுக சார்பில் ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தற்பொழுது முக்கிய கட்சிகள் வரிசையில் களத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி விஜய் தனது வேட்பு மனுவை கிழக்கு

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அன்று மரக்கடையில் பரப்புரை விஜய் மேற்கொண்டார். அதற்கு முன்னதாகவோ தனது கட்சித் தலைவரை ஆதரித்து தமிழக வெற்றி கழகத்தினர் இதுவரை பரப்புரையை துவக்க வில்லை.அந்த தொகுதிக்கு பொறுப்பாளர் யார் என்றும் இதுவரை அறிவிக்கவில்லை. விஜய் வெற்றி பெற்று விடுவார் என தவெகவினர் தெரிவித்தாலும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். ஒரு நாள் விஜய் ரசிகர் மன்றத்தை சென்ற முன்னாள் நிர்வாகி ஆர்.கே ராஜா இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களை சந்தித்து வாக்கு

சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆனால் அவரை தவிர வேறு யாரும் இதுவரை ஓட்டு கேட்கவே செல்லவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியின் தலைவர் போட்டியிடும் பொழுது அந்த தொகுதியே கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுழன்று அனைத்துப் பகுதிகளிலும் ஓட்டு வேட்டையாடவார்கள்.

ஆனால் இங்கு ஈ காக்கா கூட இல்லை என கிண்டல் அடிக்கும் அளவுக்கு தவெகவினர் செயல்பாடு உள்ளது. இனியாவது தேர்தல் பரப்புரையை தனது கட்சி தலைவர் தொகுதியில் மேற்கொள்வார்களா என கேள்வி எழுந்து வருகிறது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *