Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின்.திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லீமாரோஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் மனுதாக்கல் செய்தார்.

அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் இவர், லாட்டரி தொழில் அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி.லீமா ரோஸ் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அவரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய செல்வந்த வேட்பாளராக அடையாளப்படுத்தியுள்ளன.லீமா ரோஸ் மார்ட்டின், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த இவரது கல்வித் தகுதி ஆறாம் வகுப்பு வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் குடும்பத்தின் அறக்கட்டளையான மார்ட்டின் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலராக செயல்பட்டு வருபவர். இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) 14 ஆண்டுகள் இருந்த பின்னர், சமீபத்தில் அதிமுகவில் இணைந்து பெண்கள் பிரிவின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

லால்குடி தொகுதியில் கிறிஸ்தவர் மற்றும் உடையார் சமூக வாக்காளர்கள் கணிசமாக உள்ளதால், இந்தத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அவரது பிரமாணப் பத்திரத்தின்படி, லீமா ரோஸின் சொத்து மதிப்பு சுமார் 1,041 கோடி ரூபாயாக உள்ளது. இதில் நகரக்கூடிய சொத்துக்கள் 139.62 கோடி ரூபாய் அளவில் உள்ளன. இவற்றில் தங்கம், வைரம், வெள்ளி, பங்குகள் போன்றவை அடங்கும். அசையா சொத்துக்கள் 909.94 கோடிதமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதல் இடத்தை பிடித்த லால்குடி வேட்பாளர் லீமா ரோஸ்
தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதல் இடத்தை பிடித்த லால்குடி வேட்பாளர் லீமா ரோஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் .திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும்
இவர், லாட்டரி தொழில் அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி
லீமா ரோஸ் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அவரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய செல்வந்த வேட்பாளராக இ.லீமா ரோஸ் மார்ட்டின், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த இவரது கல்வித் தகுதி ஆறாம் வகுப்பு வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் குடும்பத்தின் அறக்கட்டளையான மார்ட்டின் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலராக செயல்பட்டு வருபவர். இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) 14 ஆண்டுகள் இருந்த பின்னர், சமீபத்தில் அதிமுகவில் இணைந்து பெண்கள் பிரிவின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.லால்குடி தொகுதியில் கிறிஸ்தவர் மற்றும் உடையார் சமூக வாக்காளர்கள் கணிசமாக உள்ளதால், இந்தத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அவரது பிரமாணப் பத்திரத்தின்படி, லீமா ரோஸின் சொத்து மதிப்பு சுமார் 1,041 கோடி ரூபாயாக உள்ளது. இதில் நகரக்கூடிய சொத்துக்கள் 139.62 கோடி ரூபாய் அளவில் உள்ளன. இவற்றில் தங்கம், வைரம், வெள்ளி, பங்குகள் போன்றவை அடங்கும். அசையா சொத்துக்கள் 909.94 கோடி ரூபாய் மதிப்புடையவை.அவரது கடன்கள் சுமார் 8.57 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-25 ஆண்டுக்கான அவரது வருமானம் 9.82 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. லீமா ரோஸின் குடும்ப சொத்து மதிப்பு மொத்தம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களது மகன் ஜோஸ் டைசன் மார்ட்டினின நகரக்கூடிய சொத்துக்கள் 225.56 கோடி ரூபாயும், அசையா சொத்துக்கள் 439.21 கோடி ரூபாயும் இருப்பதாக கூறப்படுகிறது.தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆவார். அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியிலிருந்து போட்டியிடும் இவர், லாட்டரி தொழில் அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி. அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அவரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய செல்வந்த வேட்பாளராக அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வளவு சொத்து மதிப்பு உள்ள பொழுது மக்களின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்து சமூகப் பணி ஆற்றுவாரா என்று அப்பகுதி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *