Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு தனி எண்கள் அறிவிப்பு – எஸ்.பி. தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23.04.2026 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 24 மணிநேரமும் தொகுதி வாரியாக நிலையான கண்காணிப்பு குழு (SST) மற்றும் பறக்கும் படை குழுவினர் (FST) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


மேலும். இம்மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட 4 சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் தீவிரமாக வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பரிசு பொருட்கள் விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள்.
8939146100, 100, 0431-2333629 ஆகியவற்றை அணுகுமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *