திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் GETNLA-2026 வேட்புமனு பரிசீலனை விவரங்களின்படி,
138. மணப்பாறை தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சார்பில் 3 பேரும், பதிவு செய்யப்பட்ட இதர அரசியல் கட்சிகள் சார்பில் 4 பேரும் மற்றும் 12 சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் உள்ளனர்.

139. ஸ்ரீரங்கம்தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 4, இதர கட்சிகள் சார்பில் 7 மற்றும் 12 சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் உள்ளனர். 140. திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 3, இதர கட்சிகள் சார்பில் 7 மற்றும் 12 சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் உள்ளனர். 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 4, இதர கட்சிகள் சார்பில் 9 மற்றும் 10 சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் உள்ளனர்.
142. திருவெறும்பூர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 4, இதர கட்சிகள் சார்பில் 5 மற்றும் 18 சுயேச்சைகள் என அதிகபட்சமாக மொத்தம் 27 வேட்பாளர்கள் உள்ளனர். 143. லால்குடி தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 4, இதர கட்சிகள் சார்பில் 6 மற்றும் 14 சுயேச்சைகள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் உள்ளனர்.

144. மண்ணச்சநல்லூர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 4, இதர கட்சிகள் சார்பில் 4 மற்றும் 16 சுயேச்சைகள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் உள்ளனர். 145. முசிறி தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 3, இதர கட்சிகள் சார்பில் 6 மற்றும் 3 சுயேச்சைகள் என மொத்தம் 12 வேட்பாளர்கள் உள்ளனர். இறுதியாக, 146. துறையூர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 4, இதர கட்சிகள் சார்பில் 3 மற்றும் 10 சுயேச்சைகள் என மொத்தம் 17 வேட்பாளர்கள் உள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளையும் கணக்கிடுகையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சார்பில் 33 பேரும், பதிவு செய்யப்பட்ட இதர அரசியல் கட்சிகள் சார்பில் 51 பேரும் மற்றும் இதர வேட்பாளர்கள் (சுயேச்சைகள்) 107 பேரும் என மொத்தம் 191 வேட்பாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு களத்தில் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments