திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் வீதி தெப்பக்குள தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் மனோகரன் முன்னிலையில் மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன் ஏற்பாட்டில் 2000க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாய இளைஞர்கள் நிர்வாகி திலீப் தலைமையில் தங்களை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி யார் முதலமைச்சராக தமிழ்நாட்டில் பொறுப்பேற்று தமிழகத்தை ஒளி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகின்றோம் என்று கூறினர். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments