தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டத்தில் SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், மாவட்டத்தின் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று (08.04.2026) பல்வேறு துறைகள் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தன.மணப்பாறை தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், கிராமப்புறங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற பேரணிகள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு மெஹந்தி மூலம் வாக்கு விழிப்புணர்வு செய்தியும் பரப்பப்பட்டது.
திருச்சி மேற்கு தொகுதியில் தொழிலாளர் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குப்பதிவு அவசியம் வலியுறுத்தப்பட்டது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளும் நடந்தன.

திருவெறும்பூர் தொகுதியில் ‘Selfie Point’ அமைத்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர்களுக்கும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.முசிறி மற்றும் லால்குடி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.மணச்சநல்லூர் மற்றும் துறையூர் தொகுதிகளில் மருத்துவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற கோஷத்துடன், மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments