திருச்சிராப்பள்ளி மாவட்டம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரத்தில் 09.04.2026 அன்று உண்டியல் திறப்பு நடைபெற்றது. இந்த உண்டியல் திறப்பில் திரு.சு.ஞானசேகரன் (தக்கார்/இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி), திரு.எம்.சூரியநாராயணன் (இணை ஆணையர்/செயல் அலுவலர்), திரு.என்.யக்ஞநாராயணன் (துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அலுவலர், திருச்சி), திருமதி.வி.சுமதி (உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்)), திரு.க.அருட்செல்வன் (உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) திருச்சி), திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், திரு.நா.சீனிவாசன் (ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்), திருக்கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் மற்றும் கொனலை இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்களின்படி, முதன்மை திருக்கோயில் ரொக்கமாக 96 83 554- ரூபாயும், பொன் இனம் 0.918 கி.கி. அளவும், வெள்ளி இனம் 2.222 கி.கி. அளவும் சேகரிக்கப்பட்டன. மேலும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 178 NO’S மற்றும் அயல்நாட்டு நாணயங்கள் 701 NO’S கிடைக்கப்பெற்றன. இதற்கு முன் இறுதியாக 26.03.2026 அன்று உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments