திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காள தேசம் நைஜீரியா, பாகிஸ்தான் ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய வழக்கு முடிவடைந்தாலும் சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் 109 அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வழக்குகள் முடிந்து முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று காலத்தில் தங்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி, கோரிக்கை பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF







Comments