திருச்சிராப்பள்ளி மாவட்டம்,திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம்,திருச்சிராப்பள்ளி வனச்சரகம் பகலவாடி பீட் எல்லைக்குட்பட்ட துறையூர் தாலுகா அம்மாபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வன உயிரினமான குள்ளநரியை வைத்து திருவிழாவில் பூஜை செய்து பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தி துன்புறுத்தியதாக

கிடைக்கப் பெற்ற தகவலின் பெயரில் திருச்சிராப்பள்ளி மண்டல வன பாதுகாவலர் R.காஞ்சனா IFS உத்தரவின் பெயரில் மாவட்ட வன அலுவலர் S.கிருத்திகா IFS திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் அவர்களின் அறிவுரையின் பேரில் உதவி வன பாதுகாவலர் V. செல்வம் ACF திருச்சி அவர்களின் மேற்பார்வையில் திருச்சி வனச்சரக அலுவலர் V.P. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வன பணியாளர்கள் குழு அம்மாபட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடர்புடைய 1.

தங்கராஜ் வயது 42 2. சரவணன் வயது 42 3. ராஜேந்திரன் வயது 60 4. ராஜு வயது 40 5. சுப்பிரமணி வயது 40 ஆகிய ஐந்து நபர்கள் மீது 23.5.26 ஆம் தேதியில் திருச்சி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1972 வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 ல் குள்ளநரி வகைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டம் பிரிவுகள் 9, 39, 51 அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments