பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் தோறும் போராட்டம் மற்றும் சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சிஐடியு பொது தொழிலாளர்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், கரூர் பைபாஸ்சாலை வெண்மணி இல்லத்தில் உள்ள சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் மாநிலத்தலைவர் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், துணைப் பொதுச்செயலாளர் ராசப்பன், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தியதுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர், இடையாளர் மற்றும் காவலர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 8,500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையை முன்வைத்தனர்.

பணிநிரந்தரம்இன்றிகுறைவானஊதியத்தில் பணியாற்றிவரும் இவர்களை, பணிவரன்முறையை செய்திடவேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகள் வழங்கப்படாமல் உள்ள இளஞ்சிவப்பு பட்டையை வழங்கிட வேண்டும், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் இருபத்தாறாயிரம் ரூபாய் வழங்கிடவேண்டும், தாயுமானவர் திட்டத்தில்உள்ள குறைபாடுகளை களைந்துடவேண்டும் மேலும் மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம் 4ம்தேதி மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தமிழக அரசும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் இதனை தீர்க்க முன்வராவிட்டால் சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர்

பேட்டி : திரு.குமார் – மாநிலத் தலைவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது தொழிலாளர்சங்கம்
குறிப்பு : படக்காட்சி திருச்சி எப்டிபி
File : TRI TNCSC Employees Meeting_11

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments