காட்டுப்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் மரங்கள், மின்கம்பங்கள், வாழை மரங்கள் உடைந்து சேதம், விவசாயிகள் வேதனை, உடைந்த வாழைக்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை…திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம், காட்டுப்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் சூறாவளி காற்றடித்து கனமழை பெய்தது, பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து சாலைகளிலும் வீடுகளின் முன்புறமும் விழுந்தது, நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, காட்டுப்புத்தூர் காந்தி நகர் பகுதியில் பெரிய புளியமரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது, மேலும்,

காட்டுப்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் சாலை ஓரம் இன்னும் வீடுகளில் தென்னைமரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, காட்டுப்புத்தூர் அருகே உள்ள சில பகுதியில் வீட்டின் மீதும் பனைமரம் விழுந்ததில் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், ஆனால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன, மஞ்சமேடு பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில்
இருந்த சில வாழை மரங்கள் சூறாவளி காற்றால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர், மேலும், தென்னை மற்றும் புளியமரங்களும் பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளது, நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததுடன், பல மின்கம்பங்களும் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சேதங்களை ஆய்வு செய்து மின்சாரம், சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments