Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்சாரம் துண்டிப்பு: இருளில் பயணித்த பயணிகள்!

கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் மன்னார்குடியில் இருந்து தினமும் நேற்றிரவு 8:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.

இந்த ரயிலின் முன்பதிவு பெட்டி ஒன்றை, பொதுப் பெட்டி (முன்பதிவு இல்லாத பெட்டி) என நினைத்து நூற்றுக்கணக்கான பயணிகள் அதில் ஏறி அமர்ந்துள்ளனர். ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், இது முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்கும் பெட்டி என்று கூறி, அதில் அமர்ந்திருந்தவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், பயணிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே நிர்வாகத்தினர், அந்த குறிப்பிட்ட பெட்டிக்கான மின் இணைப்பை அதிரடியாகத் துண்டித்தனர். இதன் காரணமாக மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் இல்லாமல் கடும் இருளில் மூழ்கியபடி, பாதுகாப்பற்றமுறையில் பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்க்கு வந்தவுடன் காவல்துறையினர் ஏற்கனவே முன்பதிவில்லாத பெட்டியில் அமர்ந்திருக்கும் பயணிகளை கீழே இறங்க சொன்ன பொழுது வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல்துறையினர் பயணியுடன் தெரிவித்தும் அவர்கள் முறைப்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் நாங்கள் மன்னார்குடியில் ஏறி அமர்ந்து ரயில் புறப்படும் நேரத்தில் எங்களை இறங்க சொன்னார்கள் அப்பொழுதுதான் அந்த கோச்சியில் முன்பதிவு இல்லாத பெட்டி என்ற பலகைக்கு கீழே பேப்பரில் எழுதி இந்த ரயில் பெட்டி திருச்சியிலிருந்து முன்பதிவு பெட்டியாக செல்லும் என ஓட்டுனர் இதைக்கண்டு பயணிகள் ஆத்திரம் அடைந்ததாக குறிப்பிட்டனர்.
திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் சென்று ஊட்டியில் சாரண சாரணியர் முகாமிற்கு 80 மாணவர்கள் இந்த பெட்டியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.

அவர்கள் ரயிலில் ஏறி பயணம் செய்ய முடியாமல் நடைமேடையில் நின்று தவித்தனர்.ரயில் புறப்பட தயாரானதால் 80 மாணவர்களும் சாரண சாரணியர் அலுவலர்களும் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் 80 பேரும் ஓவ்வொரு பெட்டியிலும் கீழே அமர வைத்து அழைத்து சென்றனர்.
பெற்றோர்கள் இதைகண்டு மிகுந்த வருத்தத்துடன் மாணவர்களை வழி அனுப்பி வைத்துள்ளனர்.

ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக்கால்
முன்பதிவு செய்த சாரண சாரணியர் மாணவர்கள் இரவில் ரயில் பெட்டியில் கீழே அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளி விட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் சக பயணிகளும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர் முறையாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்ற அறிவிப்பு இல்லாததால் பயணிகள் ஏறி அமரும் நிலை ஏற்பட்டது இனி இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக்கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *