108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கு நடத்தப்படும்.

மிகவும் விஷேசமான ஜேஷ்டாபிஷேகத்தின் போது இன்று காலை கருடமண்டபத்திலிருந்து தங்ககுடம் எடுத்து வந்து, அம்மாமண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து கோவில் யானை ஆண்டாள் மீது திருமஞ்சனம் (புனிதநீர்) வைக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்களால் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் 4 பேர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புனிதநீர் அடங்கிய தங்கக்குடம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்கிட உள்பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் மூலஸ்தானம் கொண்டு செல்லப்பட்டது. மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கில்கள் சாற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று மாலை நம்பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் சாற்றப்பட உள்ளது. திருக்கோவில்கள் நடை அடைக்கப்பட்டிருந்ததால் கைங்கர்யத்தை காண முடியாத பக்தர்கள், வழி நெடுகிலும் திரண்டிருந்து புனிதநீர் கொண்டு செல்லும் கைங்கர்ய நிகழ்சியினை கண்டு வணங்கியபடி நின்றனர்.

அதேநேரம் தைலக்காப்பு சாற்றப்பட்டிருப்பதால் இன்றுமுதல் 48 நாள் நம்பெருமாள் (மூலவர்) திருவடிசேவை கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF







Comments