துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார்..

ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு..
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாசலபுரம், உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி, வலையப்பட்டி கோட்டப்பாளையம் மற்றும் வைரிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் செய்து வருகின்றனர், விவசாயிகள் பயன்பெறும் வகையில்மேற்கூரிய கிராமங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார், தொடர்ந்து விவசாயிகள் நலன் கருதி பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றார்,

நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி அரசிடம் நேரடியாக விற்பனை செய்து உரிய விலையைப் பெற முடியும் என்றும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்,
இந்நிகழ்ச்சியில் வணிக அதிகாரி மாறன் கொள்முதல் அலுவலர் ராசப்பன், பட்டியல் எழுத்தர் மதுபிரகாஷ் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், விவசாயிகள், தமிழக வெற்றிக்கான கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments