தமிழக முதல்வர் , தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” (Singappen Special Force)-யை நேற்று(09.06.2026)-ந்தேதி துவங்கி

வைத்தார்கள். தமிழக முதல்வர் அறிவுரைப்படி, திருச்சி மாநகரில், திருச்சி வடக்கு மற்றும் தெற்கு என 2 “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”இன்று (10.06.2026)ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்கண்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்ற உள்ள பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர ஆயுதப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., காவல்துறணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர் தக்க அறிவுரைகளை வழங்கியும், அவர்களுக்கு வழங்கபட்ட பிரத்யேக வாகனத்தினை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision

Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments