துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் மழையால் பயணிகள் கடும் அவதி – முழுமையான நிழற்குடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சொரத்தூர் ரவுண்டானா அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரவு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து 7 மணி முதல் இரவு 9 மணி வரை துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த இந்த மழையால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையின் மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில், பக்கவாட்டு தடுப்புகள் இல்லாததால் மழைநீர் மற்றும் காற்று நேரடியாக உள்ளே புகுந்தது. பயணிகள் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டது, இதனால் நிழற்குடை முழுவதும் தண்ணீர் தேங்கி, அங்கு காத்திருந்த பயணிகள் மழையில் நனைந்து தவித்தனர்.

குறிப்பாக பெரம்பலூர், ஆத்தூர், தம்மம்பட்டி, சேலம் மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகாக காத்திருந்த பயணிகள் பகுதியில் போதிய வசதிகள் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மழையில் நனைந்தபடியே பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மழையிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அருகிலிருந்த மரங்களின் அடியிலும், மூடப்பட்ட கடைகளின் முன்பகுதியிலும் ஒதுங்கினர். கை குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்கள் கொட்டும் மழையில் நனைந்து பெரும் சிரமத்தை சந்தித்தனர்.துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த மழையால் பாதிக்கப்பட்டனர்.

பயணிகளை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க முழுமையான நிழற்குடை, பக்கவாட்டு தடுப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், நேரில் கோரிக்கை வைத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தற்காலிக பேருந்து நிலையத்தில் முழுமையான நிழற்குடை மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments