இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில், கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி உறையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது.முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது

“தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சினை மக்களை வாட்டி வதைக்கிறது. விவசாயிகளும் தண்ணீர் இன்றிப் பாதிக்கப்படுகிறார்கள்; எனவே, கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தாத மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.விவசாயக் கடன்களை தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ்கூறும் நல்லுலகமும் குற்றங்களை தடுக்க சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக இல்லாமல், குற்றங்களை எதிர்த்து நிற்கும் சமூகமாக மாற வேண்டும்.தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மதுரையில் ஆய்வுக்கூட்டம் நடத்தியது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது; இத்தகைய செயல் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதலாகும். ஆளுநரின் வேலை இதுவல்ல; அவரது செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது சவாரி செய்யக் கூடாது.

விலைவாசி உயர்வுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்வது, 16ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, செப்டம்பர் 1ஆம் தேதி புதுடெல்லியில் 2 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணியை நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காகத் தமிழகத்திலிருந்து இரண்டு ரயில்களில் கட்சியினர் டெல்லி நோக்கிப் பயணிக்க உள்ளனர்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, மனிதாபிமான அடிப்படையில் த.வெ.க அரசு, அரசு வேலை வழங்குவதை வரவேற்கிறோம்.மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக இருக்கக் கூடாது. அங்கு அணை கட்டுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கும். காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. மேகதாது அணை கட்டும் முயற்சி, இரு மாநில உறவுகளையும் பாதிக்கும்.
முதலாளித்துவச் சமூகத்தில் குதிரைபேர அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் இடதுசாரிகள் பக்கம் திரும்ப வேண்டும்” என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments