திருச்சி எம்பி துரை வைகோ தலைமையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்பு.திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு குழுவின் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிக் தயாள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாநகராட்சி, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட இ-சேவை மையம், நில அளவை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம். தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து கண்காணிப்புக் குழுவின் தலைவர் துரை வைகோ எம்பி கேட்டறிந்தார்.

மேலும், ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர். திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனர். மேலும், திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று துரை வைகோ எம்பி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக எம்பி ராஜாத்தி சல்மா, காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக், கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments