திருச்சி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்க கோரிக்கை திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பொதுக்குளம் தனிநபர்களால்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், கிருஷ்ண சமுத்திரம் பாசன விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி,கூத்தைப்பார் கிராமத்திற்கு உட்பட்ட கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் சமுத்திக் குளம் அமைந்துள்ளது. இந்த குளம், இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாகும். இந்த குளத்தை நம்பி சுமார் 193.76 ஹெக்டர் (478 ஏக்கர்) பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், நீர் சேமிப்பு திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27-ம் தேதி, அரசு அதிகாரிகளின் முன்னிலையில் குளத்தின் எல்லையை உறுதி செய்ய சர்வே செய்யப்பட்டு கல்தூண்கள் நடப்பட்டன. இருப்பினும், ரயில்வே தண்டவாளத்திற்கு தெற்கே உள்ள பகுதியில், எழில் நகர் மற்றும் கீழக்குமரேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து குளத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், நெற்பயிர்கள் கதிர் வரும் காலங்களில் போதிய நீர் கிடைக்காமல், விவசாயம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு, இந்த ஆக்கிரமிப்புகளால் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, குளத்தைத் தூர்வாரி, எல்லையை முறையாகப் பாதுகாத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
பேட்டி: ஆறுமுக சாமி, விவசாயி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments