Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சட்டசபையில் வன்னியரசு பேச்சு வருத்தமளிக்கிறது – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

விடுதலை சிறுத்தை கட்சி அமைச்சர் வன்னியரசு சட்டப்பேரவையில் பேசியது வருத்தம் அளிக்கிறது – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அன்பில் பொய்யாமொழியின்

27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது..

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது போன்று, சட்டமன்றம், சண்டை மன்றமாக உள்ளது என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.. மக்கள் ஆசையாக அன்பாக எங்களை இங்கு அமர வைத்துள்ளார்கள் என்று, இதற்கு என்ன அர்த்தம் என்றால் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று அவர்கள் அமர வைத்துள்ளார்கள்.

ஆனால் தவெக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் கேள்விகள் கேட்கும் போது நாங்களே அசரும் அளவிற்கு பதில் கூறுகிறார்கள்.

யாரும் முக்கியமான கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுவதில்லை, முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்களாகி முதல் முறை அமைச்சராக சட்டப்பேரவையில் அமர்ந்து உள்ளார்கள் அவர்களுக்கு அனுபவம் தேவைதான். ஆனால் எத்தனை நாட்கள் அவர்கள் அனுபவத்திற்காக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை, மக்களே தற்போது கூறுகிறார்கள் சட்டப்பேரவை நேரலையை நாங்கள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தோம் ஆனால் தற்போது எதுக்கெடுத்தாலும் கூச்சல், சண்டையை ஆளும் கட்சியினர் ஈடுபடுகிறார்கள் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் நாங்கள் அவற்றை பார்ப்பதை நிறுத்தி விட்டோம் என தெரிவிக்கிறார்கள்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது விவாதங்களை நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் கூறுகின்ற கருத்துக்களை உள்வாங்கி அதன் பின்பு பதில் அளிக்க வேண்டும் ஆனால் தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள் புரிதல் இல்லாமல் தொடர்ந்து கூச்சல், சண்டையிட்டு வருகிறார்கள். விதண்டாவிதமாக சட்டப்பேரவை அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் நேபாளத்தில் நடந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார் அதன் பின்பு தற்போது நான்கு அமைச்சர்களை மாநில அரசு குழுவாக அமைத்து அந்த பணியை மேற்கொண்டு உள்ளார்கள். இதுபோன்ற எதிர்க்கட்சிகள் கூறக்கூடிய கருத்துகளை உள்வாங்கி அதற்கு ஏற்றது போல் பதில் அளிப்பதும், நடவடிக்கையை மேற்கொள்வதும் தான் ஆக்கபூர்வமாக இருக்கும். வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவித்துவிட்டு சென்றால் போதாது என்றார்.

சட்டப்பேரவையில் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தொடர்ந்து விவாதங்களுக்கு பதில் அளித்து வருகிறார்கள். அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தால் மட்டுமே நன்றாக இருக்கும். குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளார் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார், மற்றொரு அமைச்சர் முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறார், மூன்றாவதாக ஒரு அமைச்சர் அது போன்று நிகழ்வு இல்லை என்று கூறுகிறார் இதுபோன்று அமைச்சர்கள் மாற்றி மாற்றி பேசுவது விவசாயிகள் மத்தியில் பெரும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் தான் கூறுகிறோம் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் தெளிவாக பேசினால் நன்றாக இருக்கும்.வன்னியரசு தேர்தலுக்கு முன்பாக திமுக – தவெக இடையே நடக்கும் தேர்தல் சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று கூறினார்.

சமூக நீதி என்றால் என்ன ஆதிதிராவிட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்த அளவிற்கு துணையாக நின்றது ஆகையால்தான் நெஞ்சை நிமிர்த்தி இருக்கிறோம் என்று பட்டியலிட்டு சொன்னது அண்ணன் வன்னியரசு தான். தற்போது சட்டமன்றத்திற்கு சென்றது பிறகு அவர் பேசுவது எங்கள் அனைவருக்கும் சங்கடமாக உள்ளது. நீல சாயம் வெளுத்து போனது டும் டும் என்று சொல்வது போன்று உள்ளது. சட்டப்பேரவையில் நின்று இதேபோன்று பட்டியலின் மக்களுக்கு நாங்களும் பல திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொன்னால் பயனடையப் போவது பட்டியலின மக்கள் தான். ஆனால் நாங்கள் மாறிட்டோம், சட்டையை மாற்றி கொண்டோம், என்பதற்காக சட்டப்பேரவையில் இதுபோன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து அவர்கள் அனைவரும் மாற்றிப் பேசுவார்கள். வடிவேல் காமெடி போன்று ஆட்டை திருடவில்லை, ஆட்டை திருடனை பார்த்தேன் என்று சொல்வது போன்று நிதி அமைச்சர் மரியன் வில்சன் பேசி உள்ளார். சட்டமன்றத்தில் இருந்து பேசும்போது அதற்கான பொறுப்பை முழுமையாக அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான தெளிவான பதிலையும் அவர்தான் கூற வேண்டும்.

தொகுதி மறு வரையறை என்பதை எதிர்த்து தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் உறுதியான நிலைப்பாட்டில் அன்று முதல் இன்று வரை இருக்கிறது. மாநில உரிமையை காப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. ஆகையால் தொகுதி மறு வரையறை திட்டத்திற்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசு ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்து விட்டார்கள். ஆகையால் மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டின் ஒற்றுமையை நிரூபித்திருக்க வேண்டும். அப்போதுதான் கர்நாடகாவில் இருக்கக்கூடிய மக்களுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளை தாண்டி, அவர்களின் உரிமையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று ஒரு உற்று நோக்கக்கூடிய பிரச்சினையாக தெரியும் அதற்கான வாய்ப்பை நாம் தவற விட்டு விட்டோம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நீதி சுமார் ரூபாய் 5000 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கல்வி நிதியை குறித்து விவாதிக்கவில்லை, ஒன்றிய அரசுக்கு எதிராக கேள்வியை எழுப்பவில்லை ,ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிலுவையில் உள்ள அனைத்து நிதிகளையும் பெற வேண்டும். அவ்வாறு பெற்றால் மட்டுமே மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முடியும். இல்லையென்றால் அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்றார். குறிப்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும்போது ஒன்றிய அரசு, பாஜக அரசு என்று கூற மறுக்கிறார்கள். ஆகையால் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய அனைத்து நிதியும் பெறுவதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தல் முடிந்த பிறகும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் . அதன் பிறகு அவர் இந்தியாவின் பிரதமர் மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகலாம் என தெரிவித்தார்.

 

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *