Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஆடிப்பெருக்கு – ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் திரண்ட புதுமண தம்பதியினர் வழிபாடு

ஆடிப்பெருக்கு – ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றங்கரையில் காவிரி தாய்க்கு படையலிட்டு வழிபாடுசெய்ய திரண்ட பொதுமக்கள், புதுமணத்தம்பதியினர்

வாய்க்கால் போல தண்ணீர் ஓடினாலும் பாரம்பரிய மரபுகளை பின்பற்றி வழிபாடு செய்த போதுமன தம்பதியினர் நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு, அதன்படி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும்விதமாகவும், காவிரி நதி மற்றும் நீர்நிலைகளில் நீர் பெருக்கெடுப்பதை வரவேற்று நன்றி தெரிவித்து ஆடிமாதம் 18ம்தேதி ஆடிப்பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படும்.

ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து, காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தி, வழிபடுவார்கள். ஆடிப் பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தான தர்மங்கள், துவங்கும் செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப் பெருக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.மங்கல நாளான இன்று புதுமணத் தம்பதிகள் சமேதராக நீர்நிலைகளில் புனித நீராடி தாலிப்பெருக்கு எனப்படும் தாலி மாற்றிக்கொள்வது வழக்கம். அதேபோல திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவண் கிடைக்கவேண்டி கடவுளை வணங்குவதும் இந்நாளில்தான்.

அந்தவகையில் ஆடி-18 நாளான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவேரி ஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான புதுமணத்தம்பதியினர் பெற்றோர் உறவினருடன் வருகை தந்திருந்தனர்.காவே ரித்தாய்க்கு பொதுமக்கள் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

மேலும் புதுமணத்தம்பதியினர் தாங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டும், தண்ணீர் இல்லாததால் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் புனிதநீராடி பொங்கி வரும் காவிரிபோன்று தங்களது வாழ்வும் பெருகவும், காவிரிபெருக்கெடுத்து ஓடுவதுபோல மகிழ்ச்சி நிலைக்கவும், மாங்கல்யம் பெருக்கவும் வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலிமாற்றிக்கொண்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையிலும் இந்த ஆண்டு திருச்சி மட்டுமன்றி, நாமக்கல், கருர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து காவிரி தாயை வழிபட்டு செல்கின்றனர்.

பின்னர் ஸ்ரீரங்கம், சமயபுரம், உச்சிப்பிள்ளையார் கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். அம்மாமண்டம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *