இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜஹான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை
சந்தித்தார்.
அதில் கூறுகையில்..
அடையாறு கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்ய இந்த நிதிநிலை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் வீடு கட்டும் திட்டத்திற்கான 3 லட்சமாக இருந்த நிலையில் அதனை 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது.
முஸ்லிம் பெருமக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள 25000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 35000
ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கபர்ஸ்தான் சாலை மேம்
பாட்டிற்காக
34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று காயிதே மில்லத் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமுதாயம் சார்பில் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்தாண்டு கால தொலைநோக்கு திட்டத்துடன் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான
விமர்சனங்கள் வழக்கமான ஒன்றுதான்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது அதன் பயனை மக்கள் முழுமையாக அடைவார்கள்.
லீகேஜை சரி செய்தாலே பல லட்சம் கோடி ரூபாய் தமிழகம் நலம் பெறக்கூடிய திட்டங்களாகஉருப்பெறும்.
எனவே இதைக் கண்டு தான் எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
ஊழல்களை ஒழித்தால்
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி நிதி கிடைக்கும் அதன் மூலம் பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும்.
இவ்வாறு செய்தால் தவெக
ஆட்சி நிலைபெற்று விடுமே என்ற அச்சம் தான் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் மீதான புகாரின் அடிப்படையில் அவரை விசாரிக்க தான் போலீஸ் சென்றார்கள்.
அவரை கைது செய்யும் திட்டம் போலீசாருக்கு இல்லை.
கைது என்பது திமுகவினர் ஏற்படுத்திய பரபரப்பு.
உதயநிதி ஸ்டாலின் பேசியது அநாகரிகத்தின் உச்சம்.
இதனை பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டிக்கத்தான் செய்தார்கள்.
இன்று நடைபெற்ற
பட்ஜெட் கூட்டத்தை திசை திருப்பவே உதயநிதி நாடகமாடியுள்ளார்.
உதயநிதி கைதின் போது செய்தியாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது ஆனால் ஒரே நாளில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

கடன் சுமையைக் குறைக்கவும், வருவாயைப் பெருக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன
விவசாய கடனில் ₹75,000 வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன மற்ற வாக்குறுதிகளும் நிதிநிலைக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் நிச்சயமாகச் செயல்படுத்தப்படும் என்றார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments