Site Logo mobile
Search Icon
Mobile Gif
Article

தமிழக ஜனதா தளம் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் பேட்டி

தொகுதி மறு சீரமைப்பு குறித்தான தமிழக எம்பிக்கள் கருத்தை அறியும் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது தவறு – தமிழக ஜனதா தளம் கட்சி மாநில தலைவர் பேட்டி.தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் திருச்சி எடமலைபட்டி புதூர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:

தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் முழு மனதுடன் வரவேற்கிறது. அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்திருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். நெல் கொள்முதலை விரைவுப்படுத்துதல் வேண்டும். மேகதாது விவகாரத்தில் ஏற்கனவே தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வருடத்திற்கு 105 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசை, மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கின்றோம்.

நீர்மேலாண்மைக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பதுதான். தண்ணீர் பிரச்சனை தீர்க்க நதிகளை இணைக்க வேண்டும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 250 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது, அந்த நிதி போதாது. மேலும் அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். ஆறுகளை மத்திய அரசு தேசியமயமாக்க வேண்டும்.1961-ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசி மணல் பகுதியில் காவிரி நீரை சேமிக்க அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் அந்தத்திட்டம் நிறைவேறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அணை கட்டினால் 70 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்கலாம். அதன் பிறகு 60 ஆண்டு காலம் திராவிட ஆட்சியில் இது குறித்து சிந்திக்கவில்லை. இது குறித்து தற்போதைய முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளோம். அதற்கு அதிகாரிகள் பதில்

அனுப்பியுள்ளார்கள். மீண்டும் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம். இந்த திட்டத்தை தமிழக வெற்றி கழக அரசு நிறைவேற்ற வேண்டும்.விவசாயிகள் மும்முனை மின்சார இணைப்புக்கு பணம் கட்டி விவசாயிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு கிடைக்காமல் இருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை இந்த அரசு நடத்தி ஒவ்வொரு ஜாதிக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.தொகுதி மறு சீரமைப்பு குறித்தான தமிழக எம்பிக்கள் கருத்தை அறியும் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது தவறு. தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பு உள்ளது. இது குறித்து கருத்து சொல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிகளும் ஒன்றாக உள்ளார்கள் என்ற சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

பேட்டி: ராஜகோபால், மாநில தலைவர், தமிழக ஜனதா தளம்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *