மணப்பாறை அருகே குதிரை வாகனத்தில் நல்லாண்டவர் சுவாமி திருவீதி உலா.யிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டவர் கோவில் பகுதியில் மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆடி முக்கிய திருவிழாவான ஆடி நான்காம் வெள்ளித் திருவிழா நேற்று காலையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று அதிகாலை நல்லாண்டவர் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்காரிக்கப்பட்ட நல்லாண்டவர் குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கியது. கேரளா செண்டை மேளம், வாண வேடிக்கை கள் முழங்க கோவில் முன்பிருந்து குதிரை வாகனம் முன்செல்ல அதன் பின்பு திருக்கோவில் தெய்வங்கள் அழகுமிகு மின்முத்துப்பள்ளக்கில் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்காணானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments