பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரள பத்தனம்திட்டா மக்களுக்கு 5டன்
உதவி பொருட்கள் திருச்சியிலிருந்து அனுப்பபட்டது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட பகுதியில் பெரு மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உணவு ,உடை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடவும் அவர்களை மீட்டு உதவிக்கரம் நீட்ட அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்குதேவையான உணவுப் பொருட்கள் திருச்சி முக்கிய பகுதிகளில் நான்கு மையங்கள் அமைக்கப்பட்டு தேவையான உதவி பொருட்கள் சேகரிக்கப்பட்டது.திருச்சி தன்னார்வலர்கள் இணைந்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் ,உடைகள் உள்ளிட்டவைகளை 5 டன் அளவுக்கு சேகரித்து திருச்சியில் இருந்து அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இந்த வாகனத்தை திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அரிசி, பருப்பு, கோதுமை,ரவா, சர்க்கரை, பாய், தலையணை சோப்பு உள்ளிட்ட
ஐந்து டன் பொருட்கள் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments