திருச்சி ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் ஆட்சியரகத்தில் மனு.திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் வாகன

ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் மற்றும் ஆலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கதினர், மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-கடந்த 17.07.2026 அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் நிறுவனத்திற்குப் பணி நிமித்தமாக சென்ற ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையிலேயே மூன்று ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட ஓட்டுநருக்கு எவ்வித முதலுதவியும் ஆலை நிர்வாகம் செய்யவில்லை.

மனிதாபிமானத்துடன் வெளியில் இருந்து அழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிற்சாலை வாயிலுக்கு வந்தும், அதனை உள்ளே அனுமதிக்க ஆலை நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக வெளியில் கொண்டுவரப்பட்ட ஓட்டுநரை பரிசோதித்த 108 மருத்துவப் பணியாளர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இந்த துயரச் சம்பவம் ஓட்டுநர் சமுதாயத்திற்கு மீண்டும் எங்கும் நடந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி, கடந்த 27.07.2026 அன்று ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இன்று தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களிலும் ஆட்சியர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளில் ஓட்டுநர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆலைகளுக்குச் செல்லும் ஓட்டுநர்களுக்கு முறையான உணவு வழங்குவதுடன், ஓய்வறை மற்றும் கழிவறை வசதிகளை தொழிற்சாலை ஊழியர்களைப் போலவே ஓட்டுநர்களுக்கும் தடையின்றி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments