இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அதவத்தூர் பஞ்சாயத்து சார்பில் 11.08.2026 செவ்வாய்க்கிழமை இன்று மாலை மாநகர் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் தலைமையில் பிஜேபி அரசை கண்டித்து நாடு தழுவிய பிரச்சார நடைபயணம் இயக்கம் அதவத்தூர்

சாவடி அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் தோழர் அயிலை சிவசூரியன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். நடைபயண இயக்கத்தை வாழ்த்தி ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் M. மருதாம்பாள் ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் D. நிர்மலா உரையாற்றினார். மேலத்தெரு, நடுத்தெரு ,தெற்கு தெரு
, வடக்கு தெரு, கீழத்தெரு , பஞ்சாயத்து அலுவலகம் ரோடு, எம்ஜிஆர் நகர், காந்தி நகர் வரை பொதுமக்களையும் விவசாயிகளையும் வியாபாரிகளையும் வீடு வீடாக சந்தித்து கோரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இயக்கத்தில் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் S. லெட்சுமிபிரபா கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர் தோழியர் T.லெட்சுமி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் V. தீபா மற்றும் பழனியம்மாள், பாப்பாத்தி,

ஐஸ்வர்யா,தமிழழகி, நிவேதா,வளர்மதி,ராமேஸ்வரி, தாயனூர் செயலாளர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கோரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டன. இறுதியாக சாவடியில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R.முருகன் முடித்து வைத்து உரையாற்றினார். முடிவில் அதவத்தூர் செயலாளர் தோழியர் T. சந்திரா நன்றி கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments