திருச்சி ஆடி அமாவாசை – அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.வருடம் முழுவதும் 12 மாதங்களில் வரும் அமாவாசையில், தை, புரட்டாசி, ஆடி மாதத்தில் வரும் மூன்று அமாவாசை மஹாளய அமாவாசை என்று கூறப்படும். மூன்று மஹாளய அமாவாசைகளில் அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடைந்து அவர்களின் ஆசீர்வாதமும் ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு ஆடி மாதம் நாளிலும் அமாவாசையில் வருகிறது.ஆடி மாத நாளான இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு காவிரி கரையோரங்களில் ஆடி அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பின்னர் வீடுகளில் விரதம் இருந்து வழிபடுவார்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு மூத்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பவர்கள் பாதுகாப்பாக படித்துறைகளில் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் கூடியுள்ள மக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை தருவதால்1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அதில் நீராடி பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments