திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெய் நகர் பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை வீரக்குமார் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்து கட்டி வருகிறார்.

அதில் புதுக்கோட்டை குளத்தூர் கீரனூர் புது மேல புதுவயிலை சேர்ந்த கருப்பையா மகன் கலையரசன் (35). முருகன் மற்றும் மணி ஆகிய மூன்று பேரும் கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று ஜெய்நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் வேலை பார்த்தப்போது சுமார் 50 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கலையரசன் கீழே விழுந்துள்ளார்.இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments