இன்று (12.08.2026) உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம், திருச்சிராப்பள்ளி வனச்சரகம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் அமைந்துள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான யானைகள் மறுவாழ்வு மையத்தில் உலக யானைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருச்சி மண்டல வன பாதுகாவலர் இரா. காஞ்சனா இ.வ.ப ஆலோசனையின்படி, மாவட்ட வன அலுவலர் S. கிருத்திகா இ.வ.ப முன்னிலையில், திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் வே.ப.சுப்பிரமணியம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்குப் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் மற்றும் கரும்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி விழா கொண்டாடப்பட்டது.

இதில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக் கால்நடை உதவி மருத்துவர், வனப் பணியாளர்கள் மற்றும் யானைப் பாகன்கள் (மாவுத் & காவடி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்குள்ள யானைகளுக்கு நீர் தெளிப்பான், சேற்று குளியல், பாத குளியல், நீச்சல் குளம், நடை பயிற்சி, குளியல் தொட்டி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது புதியதாக வயது முதிர்ந்த யானைகளுக்குப் பிரத்யேகமாக நீர் சிகிச்சை முறை (Hydrotherapy), யானைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கிரால் அமைப்புடன் கூடிய சிகிச்சை கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், யானைகளின் உடல் மற்றும் மன நல மேம்பாட்டிற்காகப் புதியதாக விளையாட்டுப் பொருட்களுடன் கூடிய புல் தரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

யானைகளின் பாதுகாப்பு, நலன் மேம்பாடு மற்றும் அவற்றின் வாழிடங்களைக் காப்பது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலகளவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் யானைகளுக்கு உதவ உலகை ஒன்றிணைத்தல் (Bringing the world together to help elephants) என்பதாகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments