திருச்சி,பெரியநாயகி சத்திரம் இளைஞர்கள் முன்னெடுப்பில் 1000 + பனை விதைகள் நடும் விழா! சத்திரப்பட்டி | நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பெரியநாயகி சத்திரம் – சத்திரப்பட்டி கிராமத்து இளைஞர்கள் மற்றும் இணைந்து மாபெரும் பனை விதை நடும் விழாவை முன்னெடுத்தனர்.
இவ்விழாவில், கிராமத்தின் முக்கிய நீர்நிலைகளான ஊர்க் குளம் பகுதிகளைப் பலப்படுத்தும் வகையில் சுமார் 1,000 + பனை விதைகள் ஆர்வத்துடன் நடப்பட்டன.

மண்ணரிப்பைத் தடுத்து நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் பனை மரங்களின் பங்கு அளப்பரியது என்பதை உணர்த்தும் வகையில், “இன்று நாம் தலைகுனிந்து விதை நட்டால், நாளை நம் தலைமுறை தலைநிமிர்ந்து வாழும்” என்ற விழிப்புணர்வு முழக்கத்தை முன்வைத்து இளைஞர்கள் இந்த நற்பணியைச் செயல்படுத்தினர். கிராமப் பெரியவர்களும் பொதுமக்களும் இளைஞர்களின் இந்தச் சுற்றுச்சூழல் முயற்சியைப் பாராட்டினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments