திருச்சியில் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறதா இஅல்லது அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா விசிக, மாமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு …..திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி மைய அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா, ஆணையர் வீரபிரதாப்சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சிக்கு புதிதாக உதவி ஆணையர்கள் தற்போது பதவி வகித்து வருகின்றனர். ஆனால் இந்த உதவி ஆணையர்கள் துணைமேயரை இதுவரை சந்திக்கவில்லை. மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் உள்ள மாமன்ற உறுப்பினர்களை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளரும், 17வது மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் .

திருச்சி மாநகராட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறதா அல்லது அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா என்று கேள்வியை எழுப்பினார். இதன் காரணமாக மாமன்ற மாமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து ஒவ்வொரு மாமன்ற உறுப்பினரும் தங்களது வார்டுக்குரிய உதவி ஆணையர்கள் யார் என்று கேள்வி எழுப்பினர், மேலும் புது ஆணையர்கள் மேயரை சந்தித்தனரா என்ற கேள்வியை எழுப்பினர்.தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் உறுப்பினர் பிரபாகரன் …….இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினேன்.புதிய ஆட்சி அமைந்த பிறகு மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்பதையும், அதிகாரி ஆட்சி நடக்கிறதா, அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைத்தேன்.

எனது வார்டுக்கு சொந்தமான வேதாந்திரி நகரில் மாற்றுப்பாதை
அமைத்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தர வேண்டும், வேதாத்திரி நகர் பகுதியில் சுமார் 7000 சதுர அடியில் 1.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி துவக்கப்பள்ளி எனது முன்முயற்சியால் 7மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்து திறக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருதி பள்ளியின் பின்புறம் சாக்கடை ஓடுகிற காரணத்தினால் அதற்குப் பின்பாக்க சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, பேவர் பிளாக் சுற்றி அமைக்கப்பட வேண்டும், மேலும் பூச்சிகள், பாம்புகள் உள்ளதால் பாதுகாப்பு பகுதி இந்த கோரிக்கையை மாமன்றத்தில் வைத்துள்ளேன். அதற்காக போடப்பட்ட திட்ட மதிப்பீடு என்பது போடப்பட்டு பல அதிகாரியை கைகளில் சென்று கையெழுத்து போட வேண்டிய மாநகர செயற்பொறியாளர் கையெழுத்து போடாமல் ஏறத்தாழ 3 மாதங்களாக அவரது அவரிடம் உள்ளது என்பதை வன்மையாக கண்டித்து கோரிக்கை முன் வைத்துள்ளேன்.5ஆண்டு காலமாக எனது வார்டில் இரட்டை வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கிறது அதனை உடனடியாக தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை வைத்தேன் அதற்காக சுமார் 28 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான நிதி இல்லை என்ற காரணத்தினால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக தூர்வாமல் கிடக்கும் அந்த இரட்டை வாய்க்காலை உடனடியாக தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கையை மாமன்றத்தில் வைத்துள்ளேன் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments