திருச்சிராப்பள்ளி, 27 ஆகஸ்ட் 2026: வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027- தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. கணக்கெடுப்புப் பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான தகவல்களை சரியாகவும், உரிய நேரத்திலும் வழங்கி ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தங்களது குடும்பங்களின் விபரம் விடுபட்டிருந்தாலோ அல்லது அதுகுறித்த விளக்கங்கள் தேவைப்பட்டாலோ, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மண்டல அலுவலக தொடர்பு எண்கள்:
மண்டலம் 1: +91 9842196910
மண்டலம் 2: +91 9600535464
மண்டலம் 3: +91 9444576365
மண்டலம் 4: +91 9345485431
மண்டலம் 5: +91 9514822839
மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான உதவிகள் மற்றும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட உதவி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்:
+91 944843170
+91 8220659496

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 பணிகள் வெற்றிகரமாக நடைபெற பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு துல்லியமான மக்கள்தொகை விவரங்கள் அவசியமானவை என்பதால், ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்வுடன் இப்பணியில் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments