திருச்சி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த அந்தோணி டிவோட்டா மறைவிற்கு பிறகு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் பொறுப்பு ஆயராக இருந்து வந்தார். இந்நிலையில் திருச்சி மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் தேர்வானது ரோமில் நடைபெற்று இன்று அதற்கான அறிவிப்பு வௌியிடப்பட்டது. புதிய ஆயராக எஸ்.ஆரோக்கியராஜ் (67) தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆயர் பொறுப்பேற்கும் விழா திருச்சி மேலப்புதுார் புனித மரியன்னை பேராலயத்தில் இன்று நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் முன்னிலையில் ஆரோக்கியராஜ் ஆயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்சி மறைமாவட்ட ஆயர் எஸ்.ஆரோக்கியராஜ், 1954ஆம் ஆண்டு குளித்தலை லாலாபேட்டையில் பிறந்த இவர், பெங்களுரு குருமடத்தில் பயின்று 1981ஆம் ஆண்டு குருபட்டம் பெற்றார். திண்டுக்கல், அய்யம்பட்டி, உடையாபட்டி, திருச்சி மேலப்புதுார் மரியன்னை பேராலயம், சகாயமாதா தேவாலயங்களில் பங்குத்தந்தையாகவும், தமிழ்நாடு ஆயர்கள் கவுன்சிலின் பிராந்திய செயலாளர், பால் செமினெரியின் ரெக்டர், மறைமாவட்ட அதிபர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC







Comments