Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

முன்பின் தெரியாதவர்களின் பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்க வேண்டாம்

முன்பின் தெரியாதவர்களின் பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்க வேண்டாம் என்று பொதுமக்கள் நலன் கருதி திருச்சி மாநகர காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதில்முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள்.

உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர் போல் நண்பராகி, பின்பு அந்த நபர் தான் இந்தியா வருவதால் தன்னுடைய பெரும் பணத்தை கொண்டுவர முடியாது. எனவே தன்னுடைய கோடிக்கணக்கான பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பார்சல் செய்து உங்கள் முகவரிக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிப்பார். பார்சலை பணம் கட்டி பெற்றுக்கொள்ளுங்கள். நான் இந்திய வந்தபின் என்னிடம் கொடுங்கள் என்று தெரிவிப்பார்கள்.

அதை நம்பி நீங்களும் அவர்கள் கூறும் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவீர்கள். ஓரிரு நாளில் உங்களது தொலைபேசியில் சுங்கத்துறை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு கும்பலை சேர்ந்த ஒரு நபர் உங்களை தொடர்பு கொள்வார். உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசு பார்சல் வந்துள்ளதாகவும், அதைப் பெறுவதற்கு சுங்க வரியாக சில ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை செலுத்த வேண்டும். இல்லையெனில் வெளிநாட்டு பொருட்களை அனுமதியின்றி இறக்குமதி செய்த குற்றத்திற்கு தங்களை கைது செய்து சிறையில் அடைக்கபடுவீர்கள் என்றுகூறி உங்களிடமிருந்து பணம் பறிக்க அக்கும்பல் செயல்படுகிறது.

பொதுமக்கள் இதுபோன்று இணையவழி குற்றவாளிகளின் மோசடி வலையில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பு : சுங்கத்துறை தனிநபர்களை தொலைபேசி வாயிலாக அழைத்து வரி செலுத்த அறிவுறுத்துவது இல்லை.

மேலும் இணையவழி புகார்களுக்கு 
https://cybercrime.gov.in/

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *