திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 4800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இத்திட்டத்தில் அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம்.
வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 (பசு மற்றும் எருமை) மாடுகளுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தில் இரண்டரை முதல் எட்டு வயதுடைய பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருத்தகத்தை அணுகிப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO







Comments