Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஐடிஐ (ITI) தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களில் ஒரு வருட ITI தொழிற்பழகுநர் பயிற்சிக்கு (Apprentice 2021 2022) 54 Wireman, 52 Electrician, 4 Computer Operator, 4 Draftsman, 2 Instrument Mechanic மற்றும் 4 Surveyer ஆக மொத்தம் 120 1T1 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

தொழிற்பழகுநர் ஒரு வருட கால பயிற்சிக்காக (Apprentice 2021-2022) 120 இடங்களுக்கு மேற்பார்வை வருகின்ற 26.07.2021, 27.07.2021 மற்றும் 28.07.2021 ஆகிய மூன்று நாட்களில் திருச்சி மன்னார்புரம் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

தகுதியுள்ள நபர்கள் கீழ்கண்ட உண்மை மற்றும் நகல் (Original, Xerox Copy) ஆவணங்களுடன், 

1. கல்வி சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் (TC)

2. வயது சான்றிதழ்

3. சாதி சான்றிதழ்

4. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண்.

5.மாற்று திறனாளி சான்றிதழ்.

மேற்கண்ட ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் தகுதி உடையவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *