1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றியை இந்தியா பெற்றது. 50-ஆவது வெற்றி கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் “ஸ்வர்னிம் விஜய் மஷால்” வெற்றி தீபமானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டது.
பின்னர் ராணுவத் துறை அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்த தீபமானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எடுத்துச்செல்லப்படும்.

பின்னர் இறுதியாக டிசம்பர் 11ஆம் தேதி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு 50 வது வெற்றி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என ராணுவத்தை துரை அதிகாரி கரன்வீர் சிங் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH







Comments