திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ள நிலையில், கிராமப்புற ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தி 100 வார்டுகளாக மாற்ற ஆட்சியாளர்கள், நிர்வாகம் முடிவெடுத்து நாளேடுகளில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்தது.

இதனிடையே ஏற்கனவே விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில் கிராமப்புற மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்றும், 100 நாள்வேலையை நம்பியுள்ள மக்களுக்கு இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காது. மேலும் வீட்டுவரி உயர்வு மற்றும் வரிஉயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாய விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் நிலை ஏற்படும் என்கின்றனர்.

இதனால் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்ககூடாது என்ற வகையில் ஊராட்சியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள மல்லியம்பத்து, மருதாண்டாக்குறிச்சி, அந்தநல்லூர்
மாதவபெருமாள் உள்ளிட்ட ஊராட்சிகளிலிருந்து ஊராட்சி தலைவர்கள் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக திரண்டனர்.
பின்னர் தங்களது ஆதார் அட்டை நகலை இணைத்து கோரிக்கை மனுவாக ஆட்சியரிடம் அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH







Comments