புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், மேலமுத்துடையாண்பட்டியைச் சேர்ந்த நவநீதன் (29) என்பவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி உறையூர் அண்ணாமலை நகரில் உள்ள கார் மறு விற்பனை அலுவலகத்தின் மூலம் தனது XYLO காரினை மறுவிற்பனை செய்ய இன்று வந்திருந்தார்.

அப்போது சோதனை ஓட்டம் செய்யும் பொழுது கரூர் பைபாஸ் சாலையில் ரயில்வே பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீ பிடித்து எரிந்தது. இதனையெடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்த காரினை அணைக்கும் பொழுது கார் முழுவதும் எரிந்த நிலையில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இதனால் கரூர் பைபாஸ் சாலையில் 1 மணி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW







Comments