அப்போது திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய காவலர் திருமுருகன் இன்று மதியம் 2 மணி அளவில் ரோந்து பணியில் இருந்த பொழுது கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயல் ரோடு கனரா பேங்க் எதிரே 4 வயது பெண் குழந்தை தனியாக நிற்கிறது என்று பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.அதன்பேரில் அங்கு சென்று அந்த குழந்தையிடம் காவலர் விசாரிக்க என்னுடைய பெயர் தனுஸ்ரீ. அப்பா பெயர் சரவணன் அம்மா பெயர் உதயஸ்ரீ என்று கூறியுள்ளார். வீடு எங்கு உள்ளது என்று கேட்டதற்கு தெரியவில்லை என்றும் வழி தெரியும் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த குழந்தையை தனது இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அவர் சொல்லும் வழியில் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வில்லியம்ஸ் ரோடு சோனா மீனா திரையரங்கு பின்புறம் உள்ள அவரது வீட்டில் கொண்டு போய் அவரது அம்மா உதயஸ்ரீயிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மணி நேரமாக குழந்தை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறி குழந்தையை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி பெற்று சந்தோசமடைந்துள்ளனர். மேலும் காவல்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர் பெற்றோர்கள்.
ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் இயங்காத நிலையில் குழந்தைகளை பெற்றோர்கள் அதிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. ஏற்கனவே வயதான அம்மாவை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்து நெகிழ்ச்சயை ஏற்படுத்தியவரும் இவர் தான். தற்போது உரிய நேரத்தில் விரைவாக செயல்பட்ட காவலர் திருமுருகனுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.



            
            
            
            
            
            
            
            
            
            
Comments