திருச்சியில் புதிய என்சிசி பயிற்சி மையம் அமைப்பதற்கான நிலம் ஒதுக்கக்கோரி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை ராக்போர்ட் என்சிசி குழுமத்தின் தலைவர் கர்னல் இளவரசன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி என்சிசி குழு பயிற்சி மையத்திற்கு ஜி கார்னரில் நிலங்கள் ஒதுக்கப்படும் என்றும், அங்கு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பயிற்சி கூடங்கள் துப்பாக்கி சூடு, சிமுலேட்டர் களம் அமைத்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
திருச்சி ராக்போர்ட் என்சிசி குழுமத்தின் கமெண்டர் கர்னல் இளவரசன் கூறுகையில்… 13 மாவட்டங்களில் இருந்து என்சிசி பயிற்சி எடுத்து வருபவர்களுக்கு போதிய பயிற்சி கூடங்கள் அமைய இல்லை. திருச்சி மாவட்டத்தில் 5 என்.சி.சி பட்டாலியன்கள் உள்ளன. 2 டி.என் பட்டாலியன், 2 டி.என் ஆயுதப்படை, 2 டி.என் கடற்படை பிரிவு, 3 டி.என் ஏர் ஸ்க்ராட்ரான் (டெக்) மற்றும் 4 டி.என் பெண்கள் பட்டாலியன். இந்த பட்டாலியன்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சி அளித்து வருகின்றன.

எனவே ஐந்து முதல் ஏழு ஏக்கர் அளவில் நிலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிரந்தரமான அலுவலக கட்டிடங்கள் அமைப்பதற்கு இது உதவும் என்றார். என்சிசி இடமிருந்து சுடுதல் மற்றும் விமான சிமுலேட்டர்கள் கிடைத்த போதும் அதனை பயன்படுத்துவதற்கான இட வசதிகள் போதுமானதாக இல்லை.
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் அதேபோன்று திருச்சியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 20,000 கேடட்கள் பயன்பெறுவர் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU







Comments