கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது.
இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று மெதுவாக அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிகளவில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
இக்கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு 09.08.2021 முதல் 23.08.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது. நேற்று (07.08.2021) மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு .R.சக்திவேல், காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு. திருச்சி மாநகரம் தலைமையில் திருச்சி மாநகர ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் 2 மணி நேரம் கொரோனா தடுப்பு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எதிர்வரும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தற்போதிலிருந்து குழந்தைகள் உடல் நலனில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென குடும்பதாரின்

உடல் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. திருச்சி மாநகரில் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக்கொள்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதி அளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments