திருச்சி ஹீபர் ரோடு சாலையில் ஓரமாக எலுமிச்சை பழம் வியாபாரம் செய்து வந்தவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தாரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (45). இவர் ஹீபர் ரோடு சாலையில் ஓரமாக எலுமிச்சை பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
Comments