திருச்சியில் 7 இடங்களில் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். மேலும் வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் திருச்சி உள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டு உள்ளது. இதற்கிடையில் வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும், சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 20 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்பொழுது திருச்சி மாநகரில் குறிப்பிட்ட 7 சந்திப்புகளில் நவீன தானியங்கி சிக்னல் அமைக்க மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த 7 இடங்களில் வழக்கமான முறையில் சிக்னல் இயக்கப்படுவதுடன் அவசர காலங்களில் ரிமோட் மூலம் சிக்னலை மாற்றியமைத்து தேவையான சாலையில் பச்சை விளக்கு ஒளிர விட முடியும்.
அத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்க முடியும் இதன் மூலம் போக்குவரத்து போலீசாரின் பணி எளிமையாகவும், மாநகரில் புதிதாக 7 இடங்களில் நவீன தானியங்கி சிக்னல்கள் அமைக்க சாலை பாதுகாப்பு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்தவுடன் எந்த இடங்களில் அந்த சிக்னல்களை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments