மனிதவளம் என்பது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் ஒரு நபர் ஒவ்வொரு நபரின் திறன்களையும் திறமைகளையும் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் வெற்றிபெற செய்வது. நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் எந்த ஒரு நபரும் தங்கள் உழைப்பு அறிவு மற்றும் நேரத்தை அர்பணிக்க தயாராக இருப்பதே மனித வளமாகும். மிகவும் சவாலான பணி என்றே கூறலாம். இத்துறையில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு தான் தேசிய மனித வள மேம்பாடு.
தேசிய மனிதவள மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருச்சி பிரிவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆண்டனி (ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம்) அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டிற்கு தங்களுடைய செயல்பாடுகள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கையில்…. திருச்சி போன்ற பெரு நகரங்களில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தும் அமைப்பில் உறுப்பினர்களாக நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். எனவே அனைவரிடமும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியமாகின்றது.

இந்த அமைப்பின் மிக முக்கிய நோக்கமே பெருநகரங்களில் பல நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை சார்ந்தவர்களுக்கிடையே கலந்துரையாடலை உருவாக்க வேண்டும் அவர்களுடைய திறன்களை வளர்க்க வேண்டும் என்பதே. இது பலருக்கும் தெரிய வரும் நிலையில் தான் இது அனைத்தையும் சாத்தியப்படுத்த முடியும். எனவே பெரும் நகரங்களில் பலவகைப்பட்ட தொழில்களும் தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களை ஒருங்கிணைப்பதே எங்களுடைய முதல் நோக்கம்.
மாதத்திற்கு ஒரு முறை அனைவரும் சேர்ந்து ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக முடிவு செய்துள்ளோம். ஒவ்வொருவரின் துறையிலும், ஒவ்வொருவரும் தங்களுடைய பணியில் தனித்துவமாய் செயல்படுவார்கள். எனவே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் புதிய ஒன்றை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
இன்னும் இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அதிகமாக இருப்பதால், இதனை மேலாண்மை சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து பல கல்லூரிகளுக்கு சென்று இத்துறை சார்ந்த மாணவர்களுடைய இத்துறை சார்ந்த தெளிவான அறிவையும் சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டும் நிகழ்வுகளை நடத்திட உள்ளோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments