புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்
தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருமதி ஜெரினா பேகம் மற்றும் ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு வடிவேல், திருமதி. அகல்யா மனநல மருத்துவர், திரு. மாரி தாசில்தார் கலால்துறை, ஆலங்குடி தாலுகா இலவச சட்ட உதவி மையம் உறுப்பினர் திரு வெங்கடேஷ், மாவட்ட மேலாளர் டாஸ்மார்க் திருமதி வசுந்தராதேவி, புதுக்கோட்டை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி மங்கையர்க்கரசி, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்ஆய்வாளர் குணமதி, காவல் உதவி ஆய்வாளர்கள் துர்காதேவி, ஆனந்தன் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணம்பட்டி கிராம பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், கிராமத்தில் கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு தற்பொழுது மனம் திருந்தி வாழ்ந்து வரும் பயனாளிகள் சந்திரா ராஜப்பன், தனபால், பவுன்ராஜ் ஆகியோருக்கு தென்னை மரக் கன்றுகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் வழங்கினார்.மேலும் கறம்பக்குடி ரீனா மெர்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தியும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு காவல்துறை தலைவர் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.


கிராம பொது மக்களுக்கு கிராம கலைக்குழு, மூலமூம் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கியும், கட்டணமில்லா தொலைபேசி எண்10581 பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.நமது காவல்துறை தலைவர் அவர்களுக்கு கிருஷ்ணம் பட்டி கிராம பொதுமக்கள் மரியாதை செலுத்தியும் கௌரவித்தார்கள்.மேலும் அக்கிராம மக்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவருக்கு தங்களது கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதற்கு நன்றியும் தெரிவித்தார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments